Browsing author

Suresh

பிரதமர் மோடியுடன், நடிகர் நாகார்ஜுனா தன் குடும்பத்தினருடன் சந்திப்பு: அரசியல் பிரவேஷமா?

நாகார்ஜுனா தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது பற்றி விவரம் காண்போம்.. நாக சைதன்யா-சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ படம், முன்பு வெளியான ‘லவ் ஸ்டோரி’ படத்தின் முதல் நாள் வசூலை விட குறைவாகவே வசூலாகி உள்ளது. இருப்பினும், தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சாய் பல்லவியின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, ‘நமோ நமசிவாய’ பாடலுக்கு வியக்க வைக்கும் வகையில் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார். இந்நிலையில், நாக சைதன்யா தனது குடும்பத்தினருடன் டெல்லி […]

குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படம் ‘குடும்பஸ்தன்’ ஓடிடி.யில் ரிலீஸ்; விவரம்

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ படம் கடந்த மாதம் 24-ந் தேதி வெளியானது. இப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. ‘நடுத்தர குடும்பத்தில் ஒரு இளைஞன் என்ன மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்கிறான் என்பதை, தனது தனித்துவமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் மணிகண்டன். இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், குரு சோமசுந்தரம், சான்வி மேகனா, […]

நடிகர் சோனுசூட்டுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு: திரையுலகில் பரபரப்பு

சோனுசூட் மீதான பிடிவாரண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றம், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா கொடுத்த, ரூ.10 லட்சம் மோசடி வழக்கில் தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாக மோஹித் சுக்லா, மற்றும் ரிஜிகா காயின்லா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலீடு திட்டம் ஒன்றில், பணம் போட்டால் அதிக லாபம் […]

சமந்தா உடனான விவாகரத்துக்கு காரணம் என்ன?: நாக சைதன்யா விளக்கம்

சமந்தா உடனான விவாகரத்துக்கு, நாக சைதன்யா மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. 4 ஆண்டுகள் காதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு, சமந்தா உடனான விவாகரத்து குறித்து, இப்போது 2-வது திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா வெளிப்படையாக பேசியிருக்கிறார். நாக சைதன்யா-சமந்தா இருவரும் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஹனிமூன், சினிமா என்று பிஸியாக இருந்த நிலையில்- 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021-ம் ஆண்டு […]

ரொம்ப பாசிட்டிவ்வா செம எனர்ஜியா நான் இருக்கிற ரகசியம்: சூப்பர் ஸ்டார் பேச்சு வைரல்..

தனது நிலையான ஆற்றலுக்கான ரகசியம் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது குறித்துப் பார்ப்போம்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 74 வயதிலும் மின்னலாக ‘ஜெயிலர்-2’ பட பணியில் இணைகிறார். மேலும், அடுத்தடுத்த கமிட்மென்ட் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிரியா யோகா குறித்து ‘சூப்பர் ஸ்டார்’ பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு […]

முழுக்க முழுக்க மசாலா தெறிக்கும் ‘குட் பேட் அக்லி’ டீசர் வெளியீடு எப்போது?

தனக்கு பிடித்த கதையில் அஜித் நடித்தார். மகிழ் இயக்கினார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இனி, வருவது.. முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் ‘குட் பேட் அக்லி’. இப்பட டீசர் பற்றிய தகவல் பார்ப்போம்.. ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் ரசிகர்கள் திரிஷாவை எதிர்பார்த்துள்ளனர். ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

“மீடியாவை மறந்தேன்” சிவகார்த்திகேயன் பேச்சுக்கு, நெட்டிசன்ஸ் கருத்து வைரலாகிறது

வெற்றியின் உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் “மீடியா’ பற்றி பேசியதற்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து பற்றிப் பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பராசக்தி’ படத்தில் எஸ்கே நடித்து வருகிறார். இப்படமும் பயோபிக் திரைப்படமாக உருவாகி வருகிறது. அடுத்ததாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், சோசியல் மீடியா பயன்பாடு குறித்து தெரிவிக்கையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக நான் சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். அப்படி நிறுத்தியதால் […]

‘என் வழி திரிஷா வழி’: முரட்டு சிங்கிளாக ரெஜினா கெரியர்

‘என் வழி திரிஷா வழி’ என்கிறாரோ ரெஜினா? இது பற்றிய முகூர்த்த விவரம் பார்ப்போம். ‘கண்ட நாள் முதல்’ திரைப்படம் மூலம் 2005-ஆம் ஆண்டு நடிகையாக தனது திரைப்பயணத்தை துவங்கினார். இந்த படத்தை தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தார். பிரபலமாக வாய்ப்பில்லை. பின்னர், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் வெற்றிப்படமாக அமைந்தபோதும், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்நிலையில் தான், ரெஜினா […]

காதல் கணவர் நடித்த ‘தண்டேல்’ படம் வெளியீடு; சோபிதா இரட்டிப்பு மகிழ்ச்சி

நாக சைதன்யாவின் காதல் மனைவி செம குஷியில் உள்ளார். அது குறித்து அவர் தெரிவித்த சங்கதி பார்ப்போம். நாக சைதன்யா நடிப்பில் ‘தண்டேல்’ வெளியீட்டையொட்டி படக்குழுவினருக்கு சோபிதா கூறியதாவது: ‘மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ‘தண்டேல்’ படப்பிடிப்பு நடந்த நாட்களில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என தனது கணவரின் படத்தைப் பதிவிட்டுள்ளார். இருப்பினும், சோபிதா மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நல்ல செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். ‘கடைசியாக உங்கள் […]

தயாரிப்பாளரின் வீட்டை இடித்த விவகாரம்: நடிகை கவுதமிக்கு கோர்ட் நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட் நடிகை கவுதமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம். நடிகை கவுதமிக்கு எதிராக அழகப்பனின் மனைவி நாச்சாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வருமாறு: ‘நாங்கள் சிறையில் இருந்து வெளியே வருவதற்குள் எங்களது வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டிருக்கிறது.எங்களது வீட்டை இடித்ததால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 கோடியை வழங்க வேண்டும் என கவுதமிக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கவுதமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. […]