Browsing author

Suresh

கடுமையான இயக்குனரா பாலா?: ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கருத்து

சிறந்த இயக்குனர் தான் பாலா. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக கடுமையாக நடந்துகொள்வாரா? என்பது பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கருத்து காண்போம்.. தமிழ்த்திரை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பாலா. சேது படத்தில் இயக்குனராக அறிமுகமாகி நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என தனித்த முத்திரை பதித்தவர். இவற்றில் பிதாமகன் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக பாலா தேசிய விருது பெற்றார். பரதேசி திரைப்படமும் பெரும் கவனத்தை ஈர்த்தது. […]

வைஷ்ணங் தேஜ்-ரிது வர்மா நட்சத்திர ஜோடிக்கு, ரசிகர்கள் ‘அட்வான்ஸ்’ வாழ்த்துமழை

‘இவருக்கு இவர் இணை’ என்ற இல்லற வாழ்க்கையை தெரிவு செய்தலும் மெகா வரலாறுதான். இது சாமான்யர் முதல் சாதனையாளர் வரைக்கும் பொருந்தும் உணர்வியல். அவ்வகையில் ஓர் நிகழ்வு காண்போம்.. தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிது வர்மா. இவர், முன்னதாக தெலுங்கில் வெளியான ‘உப்பென்னா’ படத்தில் சிரஞ்சீவியின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்த வைஷ்ணவ் தேஜ் உடன் பிறந்த நாளை கொண்டாடினார். […]

நடிகர்-கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மறைவு; உருவச்சிலை இன்று திறப்பு

தனது இறப்பின் காலம் நெருங்குவதை தெரிந்தும், மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரையாடியவர் ஷிகான் ஹுசைனி, இன்று மறைந்தார். இது பற்றிய நெஞ்சு கனக்கும் நிகழ்வுகள்.. விஜய் நடிப்பில் ‘பத்ரி’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களில் நடித்த புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி, ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷிகான் ஹுசைனி, சென்னையில் கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சிக் கூடம் […]

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் இணைகிறார் மோகன்லால்

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ பட தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமாக நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முன்னதாக வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. […]

சிவ பக்தரான ‘கண்ணப்பா’ படம் பற்றிய பேச்சு: வைரலாகும் நிகழ்வு

‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்த தகவல்கள் பார்ப்போம்.. இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, சிவன் தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கண்ணப்ப நாயனார். முற்பிறவியில் கண்ணப்ப நாயனார் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். அவர் மகாபாரதப் போரில் தன் மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்ல, உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக கைலாசம் சென்றார். அங்கு சிவனைப் பார்த்து மெய்மறந்த அர்ஜூனன், மகனை கொன்றவர்களை கொல்ல வேண்டும் என்ற வரத்தை மறந்து, ‘அய்யனே உன்னை என்றுமே […]

அஜித் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படம்; ரெடியாகிறார் இயக்குனர் தனுஷ்

அஜித் சென்னை திரும்பியவுடன், அவரை தனுஷ் சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லீ’ வெறும் ஆக்சனை மட்டுமே கொண்ட படமாக இருக்காது, குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும். தந்தை – மகன் இடையே உள்ள அன்பையும் அழுத்தமாக சொல்லப்பட்டு உள்ளது. படத்தில் அஜித்துக்கு மகனாக, ஏற்கனவே அஜித்துடன் ‘வலிமை’ படத்தில் வில்லன் ரோலில் […]

‘வீர தீர சூரன்’ படம் எப்படி?: இரண்டு வரியில் தயாரிப்பாளரின் ரிவ்யூ

ஓவர் புரோமோ படத்துக்கு ஆகாது என்பது ‘கங்குவா’ கற்றுத் தந்த படமோ பாடமோ என்னவோ.! ‘வீர தீர சூரன்’ பட பற்றி தயாரிப்பாளரே குறள் போல சுருக்கமாக குரல் கொடுத்துள்ளார்; காண்போம்.. அதாவது, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்திருக்கும் அருண்குமாருடன் கூட்டணி வைத்திருக்கிறார் விக்ரம். அருண் இயக்கிய 3 படங்களும் வரவேற்பை பெற்றன. ‘சேதுபதி’ படம் கமர்ஷியல் ரீதியாகவும், சித்தா விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாகவும் வரவேற்பு பெற்றன. எனவே, விக்ரமை […]

அனிருத் தொடர்ந்து மறுப்பு; சிம்புவின் நியூ ப்ளானிங்

சிம்பு நடிக்கும் படங்களின் இசை பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. எஸ்டிஆர் 49 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அணுகியபோது கூலி, ஜெய்லர் 2, நானி படம் என பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். எஸ்டிஆர் 50 படத்திற்கு யுவன் இசை என்பது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து, எஸ்டிஆர் 51 படத்திற்கு அனிருத் இசையமைக்க கேட்டதற்கும் மறுத்துவிட்டார். நண்பரான சிம்புவுக்கு செம அப்செட். 2016-ல் வெளியான ‘பிரேக் அப்’ பாடலின் சர்ச்சையால் தான் இசையமைக்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தற்போது […]

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்

விவாகரத்து வழக்கு தொடர்பாக, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இது பற்றிய தகவல்கள்.. இசையமைப்பாளர், நடிகர் என பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த ‘நாச்சியார்’ படம் எதிர்பார்த்த அளவில் திருப்தியில்லை. அண்மையில், இவரது தயாரிப்பில் நடித்து வெளியான ‘கிங்ஸ்டன்’ படமும் சரியாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் […]

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வரவேற்பு: தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

நூற்றுக்கும் மேற்பட்ட சிஐஎஸ்எஃப் வீரர்கள் சைக்கிள் பேரணியில் பங்கேற்று, மேற்கு வங்காளம் முதல் தமிழ்நாடு வரை வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு அவர்கள் வரும்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவர்களை ஊக்குவிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘நம்ம நாட்டோட பெயர், நிம்மதி, சந்தோஷம் அதை கெடுக்க பயங்கரவாதிகள் கடல்வழியாக நாட்டிற்குள் புகுந்து கோர சம்பவங்களை செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம். […]