Browsing author

Suresh

‘வீர தீர சூரன்’ படம் இன்று மாலை 6.30 காட்சி தொடக்கம்: பஞ்சாயத்து, சுமூக தீர்வு முழு விவரம்..

தமிழ் சினிமா வரலாறு பார்க்காத பஞ்சாயத்து இல்லை. அதில், ‘வீர தீர சூரன்’ பஞ்சாயத்து வேற லெவல்.! விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவான ‘வீர தீர சூரன்’ படம் திரையரங்குகளில் இன்று மாலை 6.30 மணி காட்சியுடன் ரிலீஸாகிறது. இது குறித்த விவகாரம் காண்போம். 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின், 2-வது பாகத்தை முதலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு, இன்று 27-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவுகளும் தமிழகத்தில் […]

தங்கக்கடத்தல் வழக்கில், நடிகை ரன்யாராவ் ஒப்புதல்: கோர்ட் தீர்ப்பு என்ன?

தங்கக்கடத்தலுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தியதாக ரன்யாராவ் ஒப்புதல் அளித்துள்ளார். இது பற்றிய தகவல்கள்.. துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், தங்கம் வாங்க ஹவாலா மூலம் பணம் அனுப்பியதை ஒப்புக்கொண்டதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நடிகை ரன்யா ராவ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், நகரத்தின் 64-வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் […]

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து: நிகழ்ந்தது என்ன?

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து பற்றி வெளியான தகவல்கள்.. ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான செய்தி இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது. அதிக தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், வைரல் வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் இந்த விபத்தை கேலி செய்து போஸ்ட் செய்து வருகிறார்கள். உண்மையில், விரேந்தர் சாவ்லா தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில்.. ஐஸ்வர்யா ராயின் சொகுசு கார் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னால் ஒரு பேருந்து காணப்படுகிறது. வீடியோவின் தலைப்பில், அவர், […]

விஜய்க்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்: பவன் கல்யாண் அறிவுறுத்தல்..

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு, பவன் கல்யாண் கூறியுள்ள தகவல் காண்போம்.. ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவிக்கையில், ‘விஜய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் அவருக்கு ஆலோசனை எதுவும் தேவையில்லை. ஆனால், அவருக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். அரசியலில் நிலைத்து இருங்கள். என்ன நடந்தாலும் மக்களோடு இருங்கள். அரசியல் ரொம்ப கஷ்டமானது. அதில், எதற்கும் தயாராக இருக்கனும். வெற்றி என்பது பின்னர் போகப் போக வரும். முதலில் கட்சியை வலுப்படுத்துவது […]

பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட படத்தில் வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளாரா? என்பது பற்றிக் காண்போம்.. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்துக்கு பின்னர் அதிகப்படியான வில்லன் வாய்ப்புகள் வந்ததால், தனது ஹீரோ இமேஜ் பாதித்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமைந்து அமோக வரவேற்பை பெற்றது. பின்னர் ‘ஏஸ்’ என்கிற […]

என் மனைவியும் நானும் விபத்திலிருந்து தப்பியது அதிர்ஷ்டவசமானது: நடிகர் சோனுசூட்..

விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனுசூட் கூறிய தகவல்கள்.. நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மும்பை – நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சோனாலி சூட் உடன் அவரது சகோதரி மற்றும் ஒரு உறவினர் காரில் இருந்துள்ளனர். விபத்தில் சோனாலி சூட் மற்றும் […]

அல்லு அர்ஜுன்-திரிவிக்ரம் கூட்டணியில் ‘அவதார்’ படத்தின் வேற லெவல்..

இதுவரை கேள்விப்படாத புராணக்கதையை எடுக்கவுள்ளோம் என்றார் நாகவம்சி. இது பற்றிய தகவல்கள்.. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிய ‘புஷ்பா 2’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் இணைகிறார். இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாக வம்சி தற்போது தயாரித்துள்ள ‘மேட் ஸ்கொயர்’ படத்தின் புரமோஷனின்போது, அல்லு அர்ஜுன்- திரிவிக்ரம் படம் குறித்து அப்டேட் கொடுத்தார். அவர் கூறுகையில், ‘அல்லு அர்ஜுன் மற்றும் […]

வீர தீர சூரனா, எம்புரானா, சிக்கந்தரா?: கலெக்‌ஷனில் கலக்கப் போவது யாரு?

இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. * அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் இரண்டு பாகங்கள் ஆகும். இதில், 2-ம் பாகம் முதலில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படம் நாளை மறுநாள் ( 27-ந் தேதி) திரைக்கு வருகிறது. * தமிழ்நாட்டில் […]

என்னை ட்ரோல் செய்யும் குழுவிடம் பேசினேன்: நடிகை பூஜா ஹெக்டே விசித்திர தகவல்

ஏன் என்னை குறிவைத்து நெகடிவிட்டி செய்தி பரப்புகிறீர்கள்? என கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது என கூறியுள்ளார் பூஜா. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன், சூர்யா ஜோடியாக ரெட்ரோ போன்ற படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, ‘ட்ரோல்களைப் பார்க்கும்போது பல நேரங்களில், அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு […]

நடிகையின் கை-கால்களை கட்டிப்போட்டு, நகை-பணம் கொள்ளை: திரையுலகில் பரபரப்பு

நடிகை ஒருவரிடம் கொள்ளையடித்த சம்பவம் பற்றிய தகவல்கள்.. கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள, பாலிவுட் நடிகை ஒருவர் ஹைதராபாத்துக்கு வந்துள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள வசாப் டேங்கில் இருக்கும் ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அவரை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத 4 பேர் அவரிடம் இருந்த பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகையின் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த புகாரில் நடிகை […]