Browsing author

Suresh

இப்ப வாடகை வீட்டில் இருப்பதால் ‘3 பிஹெச்கே’ படம் எனக்கு கனெக்ட் ஆகுது: ரவிமோகன் விமர்சனம்..

‘3 பிஹெச்கே’ படம் குறித்து, ரவிமோகன் தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. சித்தார்த் ஹீரோவாக நடிந்துள்ள ‘3 பிஹெச்கே’ படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தேவ​யானி, யோகி​பாபு, மீதா ரகு​நாத், சைத்ரா உள்​பட பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்​கீஸ் சார்​பில் அருண் விஸ்வா தயாரித்​துள்ள இதன் டிரெய்லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் கலந்​து​கொண்ட ரவி மோகன் பேசும்​போது, ‘இந்​தப் படத்​தைப் பார்த்து​விட்​டேன். பாலு மகேந்​திரா​வின் ‘வீடு’ எந்​தளவுக்​குப் பேசு பொருளாக அமைந்ததோ, அதுபோல இந்​தப் […]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம்..

தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்து கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இதனைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தில் ஹீரோவாக நடித்து தனித்த முத்திரை பதித்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப். இந்த இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்கள் பிரதீப்பிடம் கதை கூறி வருகிறார்கள். ஆனால், பிரதீப் அடுத்து […]

அஜித்துடன் மகிழ் திருமேனி மீண்டும் இணைகிறாரா?

‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்,துடன் இணைகிறாரா இயக்குனர் மகிழ் என்பது பற்றிப் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை பார்க்க அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது மகிழ் திருமேனி தெரிவிக்கையில், ‘தடையற தாக்க’ படத்தினை திரையரங்கில் பார்த்தவர்கள் போக, இணையத்தில் பார்த்தவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்படம் வெளியான […]

போலீஸ் அதிகாரியாக கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்..

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கிற்கு பேசும் வகையில் ஒரு படமும் இன்னும் அமையவில்லை. மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் அறிமுகமானவர் என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கவுதம் ராம் கார்த்திக். இப்படத்தினை சூரிய பிரதாப் இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘நாளைய இயக்குநர் சீசன் 1’ மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சூரிய பிரதாப் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சௌந்தர்யா ரஜினிகாந்த் […]

தமிழ் திரையுலகில் கொக்கைன் புழங்கக் காரணம் ஒரு முன்னணி நடிகர்: பாடகி சுசித்ரா அதிரடி..

பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள தகவல்கள் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது: ‘சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் த்ரிஷாவும், கீதாஞ்சலி செல்வராகவனும் என் மீது வழக்கு தொடுத்தார்கள். அவர்கள் என்னிடத்தில் கொக்கைன் இருப்பதாகவும் நான் விற்பனை செய்து வருவதாகவும் புகார் அளித்தார்கள். காவல்துறை எனது வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் சோதனை செய்தது. அவர்கள் எனது ரத்த மாதிரிகளையும் பெற்றுச் சென்றனர். இறுதியில் என் மீது தவறு இல்லை என்பதால், காவல்துறை அமைதியாக இருந்து விட்டார்கள். […]

மீண்டும் இயக்குனர் ஆகிறார் எஸ்.ஜே.சூர்யா; புதிய படம் பற்றி அப்டேட்

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் ‘வாலி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முத்திரை பதித்தார். பின்னர் விஜய் நடிப்பில் ‘குஷி’ படத்தையும் இயக்கி தொடர் வெற்றி பெற்றார். மேலும், தொழில்நுட்ப திறனுடன் ‘நியூ’ என்ற சைன்ஸ் ஃபிக்சன் கதையை எடுத்து அதிலும் வெற்றியும் கண்டார்.இதனைத் தொடர்ந்து ‘அன்பே ஆருயிரே’ படத்தை எடுத்து அசத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இசை’ என்ற படத்தை இயக்கினார். இசையமைப்பாளரும் இவர்தான். Hi folks , Ur Director S.J.Suryah is […]

நயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து ‘பயங்கர அவதாரம்’ எடுக்கிறார் ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா தற்போது தனது அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட் சொல்லி வித்தியாசமாக அசத்தியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. ராஷ்மிகா கதையின் நாயகியாக நடிக்கும் ‘மைசா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தை ரவீந்திரா புல்லே இயக்கியுள்ளார். இது குறித்து ராஷ்மிகா தனது இன்ஸ்டாவில், ‘மைசா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து, ‘எப்போதும் புதிதாக, வித்தியாசமாக, சுவாரஸ்யமாக ஏதாவது ஒன்றை உங்களுக்கு வழங்க முயற்சிப்பேன். இதுவும் அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான். இதுவரை நான் […]

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 10 திரைப்படங்கள்

தமிழ்த் திரையுலகில் வேல்ஸ் நிறுவனம் அடுத்ததாக 10 படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. 2025-2027 வரை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படங்களில் தனுஷ், ரவி மோகன், நயன்தாரா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். வேல்ஸ் நிறுவனம், புதிய இயக்குநர்களும், புதுமுக நடிகர்களும் பங்கேற்கும் பல புதிய திட்டங்களைப் பற்றியும் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இது புதிய தலைமுறை திறமையாளர்களுக்கான வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி […]

கமல்ஹாசனுக்கு, ஆஸ்கர் விருது அகாடமி அழைப்பு

ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆயுஷ்மான் குரானா மற்றும் கமல்ஹாசனை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது. அனைத்து பிரபலங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11,120 ஆக உயரும். இதில் 10,143 வாக்களிக்கும் உறுப்பினர்கள் அடங்குவர். அமெரிக்காவிற்கு வெளியே 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அழைப்பாளர்கள், அகாடமியின் அதிகரித்து வரும் சர்வதேச கண்ணோட்டத்திற்கு பங்களிக்கின்றனர். இந்த மதிப்புமிக்க கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை அகாடமியில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டின் […]

‘பிச்சைக்காரன்-3’ படம் பற்றி விஜய் ஆண்டனி அப்டேட்ஸ்

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மார்கன்’ படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், முன்னதாக வெளியாகி ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட ‘பிச்சைக்காரன்’ படத்தின் அடுத்த பாகம் பற்றி விஜய் ஆண்டனி தெரிவிக்கையில், ‘பிச்சைக்காரன் 3’ கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பிச்சைக்காரன் 3’ […]