Browsing author

Suresh

‘ராமாயணம்’ கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்: ரசிகர்கள் அமோக வரவேற்பு..

‘ராமாயணம்’ புராணக் கதை 2 பாகங்களாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளியிலும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளியிலும் வெளியிடப்படும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர். ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ராமாயணத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ பிரமிக்க வைக்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராமர் அவதாரத்தில் ரன்பீர் காட்சியளிக்கிறார். அவரது […]

எனது 36 வருட சினிமா பயணம்: நாகார்ஜூனா அனுபவப் பேச்சு..

தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘குபேரா’ படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக நாகார்ஜுனா தெரிவிக்கையில், ‘வெற்றிதான், நடிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது. சினிமாவில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது கடினம். இங்கு வெற்றியும் நடிப்பின் மீதான காதலும் கைகோர்த்து இருக்கின்றன. என்னைச் சுற்றி வெற்றியும் இருப்பது என் அதிர்ஷ்டம். கிட்டத்தட்ட 36 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தபோது, நான் தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் […]

மாறாத எனது வேகமும் ஸ்டைலும்: ரஜினி பேச்சு, வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக கூலி படமும், ஜெயிலர்-2 படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் ஸ்பெஷல் என்றாலே அவரது ஸ்டைல், வேகமான நடை, பாவனைதான். ‘பாட்ஷா’ படத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் தங்கள் அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்தபோது, ‘அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி வேகத்துக்கு எங்களால் நடக்க முடியவில்லை’ என தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. அதுமட்டுமின்றி, இப்போது 74 வயது ஆனாலும், அதே வேகம் தொடர்ந்து கொண்டுதான் […]

ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும், ராஷ்மிகா மந்தனா வேண்டுகோள்..

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இபபடம் பெண்களுக்கு எதிரானது. ஆணாதிக்க சிந்தனை படம் முழுவதும் விரவி இருக்கிறது. அதிக வன்முறையை கொண்ட படம் என பலவாறு கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆயினும் இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா கூறும்போது, ‘ஒரு படத்தில் ஹீரோ புகைப்பிடித்தால் அது ரசிகர்களையும் புகைப்பிடிக்கத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், சமூகத்தில் புகைப்பிடிப்பது சர்வ […]

‘தக் லைஃப்’ படம் இன்றுமுதல் ஓடிடி.யில் ரிலீஸ்..

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம், தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான நாளில் முதல் காட்சியிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.97.44 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.56.24 கோடி வசூல் செய்திருந்தது. தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் மட்டுமே ரிலீஸ் ஆன இப்படம் மொழி பிரச்சனை […]

ரஜினிக்கும் டி.ராஜேந்தருக்கும் உள்ள நட்பு: தயாரிப்பாளரின் தகவல், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘சிகிட்டு’ பாடல் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. அந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் அவர் நடனமும் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கமான அனிருத் பாடலாக இது அமைந்திருந்தாலும், ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இச்சூழலில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது. பாலாஜி பிரபு தெரிவிக்கையில், ‘கூலி […]

‘கயிலன்’ படத்தில், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது: இயக்குனர் அப்டேட்ஸ்..

‘கயிலன்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ஷிவதா, ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம், ‘கயிலன்’. இதில் பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கியுள்ளார். ஜூலை 25-ல் வெளியாகும் இதன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் பற்றி இயக்குநர் அருள் அஜித் தெரிவிக்கையில், ‘கயிலன்’ என்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். […]

ராமராக ரன்பீர் கபூர்-சீதையாக சாய் பல்லவி: நாளை கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்..

பாலிவுட் திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். ராவணன் மனைவி மண்டோதரியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் […]

அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நடிகர் சங்கம் எச்சரிக்கை..

நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில், எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதுமின்றியும், பல தவறான பொய்யான […]

மோகன்லாலின் மகள் விஸ்மயா, கதாநாயகியாக அறிமுகம்..

மலையாள சினிமாவில் மோகன்லாலின் மகள் விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டுள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் ஆர்வமாக இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, ‘கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’ என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை பென்குயின் புக்ஸ் 2021ம் ஆண்டு வெளியிட்டது. கவிதைகள் மற்றும் கலைகள் நிறைந்த புத்தகம் இது. அமேசானின் ‘பெஸ்ட் செல்லர்’ பிரிவிலும் இப்புத்தகம் இடம்பிடித்தது. தற்காப்புக் கலையிலும் ஆர்வமுள்ளவர் விஸ்மயா. ‘மொய் தாய்’ என்ற தாய் தற்காப்புக் கலையைப் பயின்றிருக்கிறார். இதன் பயிற்சி […]