இருவரும் பிரேக்கப் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளனர் அமீர் மற்றும் பாவனி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு அந்த நிகழ்ச்சி விட்டு வெளியே வந்த பிறகு காதல் ஜோடியாக ஊர் சுற்றி வருகின்றனர் அமீர் மற்றும் பாவனி.

இருவரும் ஜோடியாக இணைந்து அஜித்துடன் துணிவு படத்திலும் நடித்திருந்தனர். இப்படியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாவனி ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்று கேட்க அவர் ம்ம்ம் என பதில் அளித்திருந்தார்.

இதனால் இருவரும் பிரேக்கப் செய்து கொண்டதாக தகவல் பரவிய நிலையில் தற்போது செய்தியாளர்களின் சந்திப்பில் இருவரும் பிரியவில்லை. லிவிங் டுகெதர் தான் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.