America Sent 100 Ventilator to India
America Sent 100 Ventilator to India

America Sent 100 Ventilator to India : கொரோனா நடவடிக்கை உதவிகரமாக இந்தியாவிற்கு இரண்டாம் கட்டமாக மேலும் 100 வென்டிலேட்டர்களை அமெரிக்கா வழங்கி உள்ளது.

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக போராட்டத்தில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியளித்தார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி!!

இதன்படி முதல் கட்டமாக 100 வைத்தியர்களை இந்தியாவிற்கு அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் வழங்கியது. அந்த வகையில் நாடு முழுவதும் எட்டு மண்டலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இரண்டாவது மற்றும் இறுதி கட்டமாக மேலும் 100 வென்டிலேட்டர்களை இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கி உள்ளது. அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி மையத்தின் மூலமாக இந்திய அரசுக்கு இந்த சாதனைகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த வென்டிலேட்டர் கருவிகளை மருத்துவமனைகளில் எளிதாக பொருத்திவிடலாம். நோயாளிகளுக்கு எளிமையான முறையிலும் சிகிச்சை அளிக்கலாம்.

அமெரிக்காவின் இந்த உதவி இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்றில் பேசப்படும் என்று அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.