‘அமரன்’ சாதனையை ‘குபேரன்’ முறியடிக்கும்: இணையத்தில், தனுஷ் ஃபேன்ஸ் புகைச்சல்?
தமிழ்த்திரையில், ஒவ்வொரு நடிகரும் தனித்தன்மை கொண்டவர்கள் தான். அவரவர் திறமையினால் பாக்ஸ் ஆபீசில் உச்சம் தொடுகின்றனர். இதில், ரசிகர்கள் கம்பு சுழற்றி இணையத்தில் விவாதிப்பது அபத்தமானது தானே.
ஆம், தனுஷின் 50-வது படமான ராயன் படத்தினை அவரே இயக்கி நடித்தார். இந்தப் படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. ராயன் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபீஸில் இந்திய அளவில் முதல் நாளில் ரூபாய் 21 கோடிகளை வசூல் செய்துள்ளது எனவும், உலக அளவில் ரூபாய் 28 கோடிகளை வசூல் செய்துள்ளது எனவும் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், யாருக்கு என்ன புகைச்சல் வருகிறது.
வசூலில் ஜெயம் ரவியை ஓரம் கட்டும் சிவகார்த்திகேயன்.. இனி பையன் ரேன்ஞ்சே வேறதான்!” வசூல்: இது தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வருகின்றனர். மேலும் தனுஷ் ரசிகர்களையும் சீண்டி வருகின்றனர்.
கோட், வேட்டையன் படத்திற்குப் பின்னர் இந்த ஆண்டு வெளியான படங்களில் அமரன் படம் மூன்றாவது இடத்தினை எளிதில் பிடிக்கும் என்ற பேச்சு சினிமாத்துறையில் கிளம்பியுள்ளது.
இந்தப் பேச்சு கொக்கரிக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கால்களில் சலங்கை கட்டியதைப்போல் துள்ளிக்குதித்து வருகின்றனர். இதில் சில ரசிகர்கள் தனுஷ் ரசிகர்களை சீண்டும் பணியிலும் வழக்கம்போல் களமிறங்கியுள்ளனர்.
இப்படியான ரசிகர்களின் நடவடிக்கையைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.
அதாவது, லப்பர் பந்து படத்தில் கெத்து கதாபாத்திரம் தனது விக்கெட்டினை இழந்த பின்னர், எதிர் அணி வீரர்கள் துள்ளிக் குதிப்பதை பார்த்து சந்தோஷப்படும்.
அதனைப்போல், மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் அதேநேரத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களைப் பார்க்கும்போது சிரிப்பாகவும் இருப்பதாக தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், குபேரன் படம் இந்த வசூலை எல்லாம் அசால்ட்டாக கிராஸ் செய்துவிடும்’ எனவும் கூறி வருகின்றனர்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அனைவரையும் ஈர்ப்பது தானே; அது விருதும் பெற்று வந்தால் அதை விட மரியாதை படக்குழுவினருக்கு வேறென்ன!