அமரன் : பட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து அனிருத் வெளியிட்ட பதிவு..!
அமரன் பட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து அனிருத் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் சாய் பல்லவியும் சிவகார்த்திகேயனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இந்த படத்தை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் ரஜினிகாந்த் பட குழுவை சந்தித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் தற்போது அனிருத் இந்த படத்தை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்
அதில், அமரன் சினிமாவின் சிறப்பான திரைப்படம். என் சிவகார்த்திகேயனை நினைத்து பெருமைப்படுகிறேன். சிறப்பான திரைப்படத்தை உருவாக்கிய என் அண்ணன் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் அவரது குழுவிற்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்று கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் கமல் சார் மகேந்திரன் சார் உள்ளிட்டுருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Amaran is cinema at its best 🏆🏆🏆Proud of my @Siva_Kartikeyan more than ever ❤️❤️❤️ Heartfelt congrats and big ups to my brother @Rajkumar_KP and your whole technical team for creating this 🤗🤗🤗@ikamalhaasan sir, Mahendran sir and Disney bro 🫡🫡🫡
— Anirudh Ravichander (@anirudhofficial) November 6, 2024