நீங்க இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆலியா மானசா பதிலளித்துள்ளார்.

Alya Manasa Confirm Her Preganancy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஆல்யா மானசா. இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நாயகியாக நடித்தார். இதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருடர்களால் சப்-இன்ஸ்பெக்டர் கொலை : குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை…

திருமணத்திற்குப் பிறகு ஆய்லா என்ற மகளை பெற்றெடுத்த ஆலியா மானசா தற்போது ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சஞ்சீவ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ரசிகர்களுடன் படம் பார்த்த Pugazh & Sivaangi – வைரலாகும் வீடியோ | Sabhaapathy FDFS

இந்தநிலையில் ஆலியா மானசா ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேட்டதற்கு தலையை ஆட்டியபடி விஷயத்தை உறுதி செய்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.