வெறும் 20 நிமிடக் காட்சியில் நடிக்க 9 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Alya Batt Salary for RRR Movie : தெலுங்கு திரையுலகில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலி. இந்த படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து RRR என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். அவருடைய காட்சிகள் மொத்தமாகவே படத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

பிரச்னையை நான் பாத்துக்குறேன் என்ன நீங்க பாத்துக்குங்க – #simbu #simbufans 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

புதிய மருத்துவக் கல்லூரிகள் திட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

இந்த இருபது நிமிட காட்சியில் நடிப்பதற்கு அவர் மொத்தமாக ரூ 9 கோடி சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜய் தேவ்கன் அவர்களுக்கு ரூபாய் 35 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

இதனைக் கேட்ட ரசிகர்கள் என்னது இருபது நிமிட காட்சிக்கு ஒன்பது கோடி சம்பளமா என வாயடைத்து வருகின்றனர்.