அட்லீ இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்திற்கு அல்லு அர்ஜுன் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Allu Arjun Salary for Atlee Movie : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் ‌‌‌‌. இப்படியான நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் அல்லு அர்ஜுனுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது.

தமிழ் சினிமா ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் அல்லு அர்ஜுன்.. அட்லி இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்திற்கு இவ்வளவு சம்பளமா? ஷாக் தகவல்

இந்தப் படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் இந்த படத்தை தளபதி விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த அட்லி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.

பக்கத்து இலைக்கு பாயாசம் போடவேணா.. அம்மாவிடம் பளாரென அறை வாங்கிய அருண் அரவிந்த் – செம Fun

தமிழ் சினிமா ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் அல்லு அர்ஜுன்.. அட்லி இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்திற்கு இவ்வளவு சம்பளமா? ஷாக் தகவல்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? : கல்வித்துறை தகவல்

ஆனால் இது பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இப்படியான நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜுனுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அல்லு அர்ஜுன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களையும் சம்பள விஷயத்தில் பின்னுக்கு தள்ளி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.