Akshara haasan : ‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.
இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.
சரிந்த வேலி, உயிரை காப்பாற்ற ஓடிய விஜய் – பதைபதைக்க வைக்கும் வீடியோ.!
திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.
இவருக்கு பொதுமக்களுக்கு இணையாக பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். இதில் புதிதாக இணைந்திருப்பவர் அக்ஷரா ஹாசன்.
விவேகம் படத்தில் அஜித்துடன் நடித்த அவர் அண்மையில் அவர் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “ அஜித் மாதிரி ஒரு பர்சனாலிட்டியை மனிதாபிமான நபரை நான் பார்த்ததில்லை. அவர் பண்புகளை சொல்ல வார்த்தைகளே இல்லை.
அவரது தன்னம்பிக்கை வியக்க வைக்கும். அவர் ஒரு வேற லெவல் கேட்டகரி” என்றார்.
விக்ரமுடன் அக்ஷரா ஹாசன் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது.