நடிகர் அஜித்தின் ஏகே 63 திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் AK62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அவரின் அடுத்த படமான ஏகே 63 குறித்த அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அதாவது நடிகர் அஜித் ஏகே 63 திரைப்படத்தில் அட்லீ, சிவா, விஷ்ணுவர்தன், தெலுங்கு இயக்குனர் சுகுமார் ஆகியோரில் ஒருவருடன் இணையவுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.