நடிகர் அஜித்குமாரின் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகி வந்ததைத் தொடர்ந்து தற்போது தல அஜித்தின் AK62 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் AK62 திரைப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாதமே தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அஜித் தனது பைக் ட்ரிப்பில் கவனம் செலுத்த உள்ளதால், இப்படத்திற்கான படப்பிடிப்பை உடனடியாக முடித்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.