நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்திற்கான போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரவபூர்வமான தகவலை அந்நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது. இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.