Ak 60 Movie Updates : Super Special Update is Here | Kollywood Cinema News | Trending Cinema News | Kollywood Cinema news
தல 60 படத்தில் 13 வருடத்திற்கு பிறகு புதிய கூட்டணி உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Ak 60 Movie Updates : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்திலேயே தான் நடிக்க உள்ளார்.

அஜித்துக்கு கை கொடுக்குமா நேர்கொண்ட பார்வை? – வினோத் ஓபன் டாக்.!

போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு ஆலோசித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் கூட போனி கபூர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அஜித்தின் அடுத்தப்படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 64-ல் இந்த நடிகரா? மாஸ் காட்ட போகும் மெகா கூட்டணி.!

இது மட்டும் உறுதியானால் ரஹ்மான் 13 வருடத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் அஜித்தின் வரலாறு படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.