Pushpa 2

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த அஜித் மகன் ஆத்விக்.. ரசிகர்கள் செய்யும் கமெண்ட்ஸ்..!

ஓட்டப்பந்தயத்தில் ஆத்விக் முதலிடம் பிடித்துள்ளார்.

Ajith's son Aadvik first in the race
Ajith’s son Aadvik first in the race

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் இவர் கார் ரேஸில் கலந்துகொண்டு இருந்தபோது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.

அஜித்தை போலவே ஆத்விக்கும் ஸ்போட்ஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மூன்று ஓட்டப்பந்தயங்களில் முதல் பரிசை வென்று மூன்று தங்க மெடல்கள் வென்றுள்ளார். இதனை ஷாலினி அஜித் குமார் தனது instagram பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ரசிகர்கள் பலரும் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்றும், சிங்கத்துக்கு பிறந்தது சிங்கம்தான் என்றும், அப்பாவுக்கு தப்பாத பிறந்த பிள்ளை என்றும் லைக்ஸ்களை குவித்து கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றன.