வலிமை படத்தில் நடிப்பதற்காக தல அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Ajithkumar Salary for Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து இந்த படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் இருந்து இரண்டு பாடல்களும், கிளிம்ஸ் வீடியோ ஒன்றும் மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியானது. இவை அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet | HD

ஹாக்கி தர்பார் : ஜப்பானை வீழ்த்தி, இந்தியா ஹாட்ரிக் வெற்றி; கள விவரம்..

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்ததற்காக அஜித் 70 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருவதே இந்த பேச்சுதான்.