‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘அக்லி’ கேரக்டர் பற்றி நெட்டிசன்ஸ் கணிப்புகள்

Web Ads

‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் ‘அக்லி’ கதாபாத்திரம் குறித்துக் காண்போம்..

‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார்.

பின்னர், பிரபுதேவா நடிப்பில் ‘பஹீரா படம். இதனைத் தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ படத்தைக் கொடுத்து, ‘குட் பேட் அக்லி’ பட வாய்ப்பை பெற்று இயக்கி முடித்துள்ளார் ஆதிக்.

Web Ad 2

முன்னதாக, மூன்று ‘கெட்அப்’களில்நடித்து வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் எப்படி சிம்புவை 3 கெட்டப்புகளில் ஆதிக் காட்டினாரோ, அதே போலஅஜித்தை’ குட் பேட் அக்லி’ படத்தில் காட்டப்போகிறார் எனவும் பேசப்படுகிறது. இது முற்றிலும் தவறான கண்ணோட்டம் எனவும் மறுக்கப்படுகிறது.

‘மதுரை மைக்கேல்’ கேரக்டருக்கான சீன்களை எடுக்க முடியாத நிலையில், அதன் கலவையாகவே அஜித் ‘அக்லி’ கேரக்டரை மாற்றம் செய்திருக்கிறார் எனவும் இணையவாசிகள் தெரிவிக்கின்றனர். இல்லை, கண்டிப்பாக இந்த கதாபாத்திரம் அட்டகாசமாக வந்திருப்பதாகவும் சினி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மேலும், மா டாங் சியோக் நடிப்பில் வெளியான ‘தி கேங்ஸ்டர் தி காப் தி டெவில்’ பட ரீமேக் எனவும் இணையத்தில் அவரவர் யூகிக்கின்றனர்.

‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை, அக்லி கேரக்டர் வேற லெவல், ‘தல’ ரசிகர் ஆதிக், எது மாதிரியும் இல்லாத புது மாதிரி’ ரசிகர்களை ரசிக்க செய்திருப்பார்’ எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், வரும் 14-ம் தேதி ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம்.!