23 வது திருமண நாளை கொண்டாடிய அஜித்-ஷாலினி தம்பதியினரின் புகைப்படம் ரசிகர்களால் லைக்களை குவித்து வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியது. இதைத்தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் அஜித் தனது மனைவியும் பிரபல முன்னாள் முன்னணி நடிகையுமான ஷாலினி அஜித்குமார் உடன் இணைந்து தங்களது 23 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

கடந்த 2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித்-ஷாலினி தம்பதியினர் தற்போது ஒரு மகன் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் தங்களது 23 வது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருந்த நிலையில் இது தொடர்பான புகைப்படத்தை நடிகை ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களுடன் ஷேர் செய்துள்ளனர். அது தற்போது லைக்குகளை குவித்து இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.