Ajith Old Movies Remake
Ajith Old Movies Remake

தல அஜித்தின் பழைய படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith Old Movies Remake : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து வருபவர்.

இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச் வினோத் இப்படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தொடர்ந்து தல அஜித் பழைய படங்களின் ரீமேக் உரிமைகள வாங்கி வருகிறார்.

தளபதி விஜய்யின் ஆல்டைம் ஃபேவரைட் படம், எப்போ போட்டாலும் மிஸ் பண்ணாமல் பார்ப்பாராம் – இது யாரும் எதிர்பர்க்காத படம், இதோ விவரம்.!

ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வாலி படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் மிகப் பெரிய விலைக்கு வாங்கியிருந்தார்.

இதனையடுத்து தற்போது தல அஜித் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டிய வரலாறு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.