நடிகர் அஜித்குமாரின் ரீசன்ட் போட்டோ ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் தனது அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தற்போது ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறது. அந்த வகையில் ரசிகருடன் ஸ்விட்சர்லாந்தில் கூலான லுக்கில் ரீசன்டாக எடுத்திருக்கும் அஜித்தின் போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.