ஏ.எல்.விஜய் கேமிரா பிடிக்க ‘அஜித் ரேஸிங்’ படப்பிடிப்பு; ரிலீஸ் எப்போது?
அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையில், ஆதிக் இயக்கத்தில் படம் பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக ஆதிக் கூறியிருந்தார்.
இதற்கிடையில், அஜித்தின் டாகுமெண்டரி ஒன்று தயாராகி வருகின்றது. அதாவது, கடந்த ஒரு வருடமாக பல நாடுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் அஜித் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகின்றார். அதையெல்லாம் தொகுத்து ஒரு ஆவணப்படமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
மலேசியாவில் ஏ.எல்.விஜய்யும் இருக்கின்றார். ஒரு கேமராவுடன் இயக்குநீர் ஏ.எல்.விஜய் அங்கு நடக்கும் நிகழ்வுகளை படம்பிடித்து வருகின்றார்.
இதனைத்தொடர்ந்து ‘அஜித் ரேஸிங்’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் உருவாகி வருவதாக வரும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், அஜித்துடன் இயக்குநர் சிவாவும் மலேசியாவில் இருக்கின்றார். இந்த ஆவணப்படத்தை அடுத்தாண்டு நேரடியாக ஓடிடி.யில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்
இந்திய மக்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸை ஆதரிக்க வேண்டும் என பல பேட்டிகளில் அஜித் கூறியிருக்கிறார். அதற்கான ஒரு முயற்சியாகவே இந்த ஆவணப்படத்தை அஜித் ரிலீஸ் செய்யவுள்ளார்.
இதைத்தொடர்ந்து அஜித்தின் AK64 படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தகவல் வந்துள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு துவங்கி தீபாவளி பண்டிகையில் வெளியிடும் முடிவில் படக்குழு இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

