Web Ads

தனுஷ் இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிக்கும் புதிய பட அறிவிப்பு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிரபுதேவா-விஜய் கூட்டணிபோல, தனுஷ்-அஜித் கூட்டணி உருவாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

‘ராயன்’ பட வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் தனது அக்கா மகன் பவிஷை நாயகனாக அறிமுகப்படுத்தி உள்ளார். இப்படம், விமர்சனம் மற்றும் கலெக்‌ஷன் ரீதியாக திருப்தியில்லை. இப்படம் ரிலீஸான வந்த ‘டிராகன்’ படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே, தனுஷ் தான் இயக்கியிருக்கும் ‘இட்லி கடை’ படம் மூலம் நம்பிக்கையாக உள்ளார். இப்படத்தை அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகும் நாளில் அதாவது ஏப்ரல் 10-ந் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ‘குட் பேட் அக்லி’ உடனான மோதலில் இருந்து ‘இட்லி கடை’ படம் பின்வாங்கி உள்ளது.

‘குட் பேட் அக்லி’ டீசருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தனுஷ் படம் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இட்லிக்கடை படம் அஜித் படத்துடனான மோதலை தவிர்த்ததற்கு காரணமே வேறு எனவும் சொல்லப்படுகிறது.

அவ்வகையில், தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்கிறார். அதனை கருத்தில் கொண்டு தனுஷ் தனது ‘இட்லி கடை’ பட ரிலீசை தள்ளிவைத்துள்ளார். அஜித் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு அனிருத் இசையமைக்க, இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படியொரு காம்போவை ரசிகர்களும் உற்சாகமாய் எதிர்பார்க்கின்றனர். பார்க்கலாம்.

பொதுவாக, ஒரு பிரபல நடிகரின் படத்தை இன்னொரு பிரபல நடிகர் இயக்குவதென்பது புதிதல்ல. அப்படியொரு கூட்டணிக்கு ‘கதை’ சரியாக அமையவேண்டும். முன்னதாக, பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ‘போக்கிரி’ படம் வெளியானது நினைவுகூரத்தக்கது.
ajith kumar next movie director dhanush and music anirudh