நடிகை ஷாலினி அஜித்குமார் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் தனது 62 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகளுக்காக வெகு நாட்களாக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் மனைவியும், பிரபல முன்னணி நடிகையுமான ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். மேலும் அதில், “குழந்தைகளுடன் இருக்கும்போது மனம் ஆறுதல் அடைகிறது” எனவும் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அப்புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.