குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருந்த தல அஜித் குமார் மீண்டும் சென்னைக்கு வருகை தந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.

மீண்டும் குடும்பத்துடன் சென்னை திரும்பிய அஜித் குமார்!!.. வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ இதோ.!

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் குடும்பத்துடன் சென்னை திரும்பிய அஜித் குமார்!!.. வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ இதோ.!

இதற்கிடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் துபாயில் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கும் நடிகர் அஜித்குமாரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் துபாயில் இருந்து தனது குடும்பத்துடன் மீண்டும் சென்னை திரும்பியுள்ள நடிகர் அஜித்குமாரின் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் மீண்டும் சென்னை திரும்பி உள்ளதால் விரைவில் ஏகே 62 திரைப்படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.