சம்பளத்தை உயர்த்தி அஜித்.. AK64 படத்தில் நடிக்க எத்தனை கோடி தெரியுமா?

Web Ads

அஜித்தின் சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Ajith increased the salary.. Do you know how many crores to act in the film AK64
Ajith increased the salary.. Do you know how many crores to act in the film AK64

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் ஏகே 64 படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

தொடர்ந்து தற்போது கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் அஜித் சமீபத்தில் குலதெய்வ கோவிலுக்கும் சென்றிருந்தார். இந்தப் படத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக அஜித் வாங்க கூடிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அஜித் 64 படத்தில் நடிக்க அஜித் 183 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன் எடுத்த குட் பேட் அக்லி படத்திற்கு 163 கோடி சம்பளம் அஜித் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ajith increased the salary.. Do you know how many crores to act in the film AK64
Ajith increased the salary.. Do you know how many crores to act in the film AK64