அஜித்தின் அடுத்த மூன்று படங்களை இயக்க போவது யார் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Ajith in Upcoming Movies Directors : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து அஜீத் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

அதாவது ஏற்கனவே அஜித் நடித்த படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியானது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் எனவும் சமீபத்தில் தகவல் கசிந்தது.

அஜித்தின் அடுத்த மூன்று படங்களை இயக்க போவது யார் யார் தெரியுமா? ஒரே நேரத்தில் வெளியான சூப்பர் தகவல்கள்

இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவதாக யாரோடு இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என தெரியவந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை தல அஜித்தை வைத்து இயக்கிய வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என 4 படங்களை இயக்கிய சிறுத்தை சிவா தான்.

சிறுத்தை சிவா தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அடுத்ததாக அவர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை முடித்த பிறகு அஜித்துடன் கூட்டணி சேருவார் என கூறப்படுகிறது.