Ajith in Thaksha Team Success
Ajith in Thaksha Team Success

தல அஜித்திற்கு பெருமை தேடித் தரும் விதமாக தக்ஷா டீம் செயல்பட்டது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Ajith in Thaksha Team Success : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.

நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் ஆளில்லா விமான பயிற்சியில் ஈடுபட்ட தக்ஷா டீமிற்க்கு ஆலோசகராக பணியாற்றினார்.

இந்த தக்ஷா குழு கண்டுபிடித்த ட்ரோன்கள் கர்நாடகாவில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட கண்டைன்மெண்ட் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க பயன்படுத்தப்பட்டது.

தல அஜித் தலைமையிலான இந்த குழுவின் கண்டுபிடிப்பால் அந்த கண்டைன்மெண்ட் பகுதிகளில் தற்போது கொரானா பாதிப்பு ஜூரோவாக குறைந்துள்ளது என முக்கிய அதிகாரி ஒருவர் வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார்.

ஆடிய ஆட்டத்துக்கு பதிலடி.. மீரா மிதுனுக்கு விஜய் ரசிகர்கள் அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். தல அஜித்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என அவர்கள் பெருமிதத்தோடு கூறி வருகின்றனர்.

https://twitter.com/ThalaAjith_Page/status/1293814307923271681?s=19

மேலும் அந்த வீடியோவில் அவர் தல அஜித்தை தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என கூறியிருப்பது ரசிகர்களை மேலும் உற்ச்சாகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கர்நாடகாவின் துணை முதல்வர் அஜித்தின் இந்த கண்டுபிடிப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.