Ajith in Saravana Shooting Spot
Ajith in Saravana Shooting Spot

ரேஸர் உடையில் சிம்புவுடன் தல அஜித் இருக்கும் அரிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ajith in Saravana Shooting Spot : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

நடிகராக மட்டுமல்லாமல் பைக் ரேஸர், கார் ரேஸர் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் பைக் ரேஸில் கலந்து கொண்ட சில வீடியோக்களையும் ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள்.

வேட்டியை தூக்கி கட்டி ஹீரோ போல் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஷெரின் – வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில் தற்போது தல அஜித் ரேஸர் உடையில் சிம்பு, ஜோதிகா நடிப்பில் வெளியான சரவணா படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் கொடுத்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களை தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர். முதல் முறையாக இந்த புகைப்படங்கள் வெளியாகி இருப்பதால் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தல ரசிகை ஒருவர் அஜித்தின் முகம் பொறிக்கப்பட்ட மாஸ்க் அணிந்து உளள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.