கரூர் சம்பவத்திற்கு அந்த தனிநபர் மட்டும் பொறுப்பு கிடையாது.. மனம் திறந்த அஜீத்.!!

கரூர் சம்பவம் குறித்து அஜித் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேசில் அஜித் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அஜித் கரூர் சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் அவரது கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில் தற்போது அஜித் பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அந்த தனிநபரின் பொறுப்பு மட்டுமே கிடையாது நாம் அனைவரும் பொறுப்பு தான் என தெரிவித்துள்ளார் இது மட்டும் இல்லாமல் நமக்கான கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக வெறிகொண்ட ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம் இது முடிவுக்கு வரவேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் போட்டி பார்க்க கூட்டம் கூடுகிறது ஆனால் அங்கெல்லாம் இது போல் நடக்காது தியேட்டர் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு மட்டும் ஏன் இது போல் நடக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

