Ajith Fans Condolences to Bala

சண்டைகளை மறந்து தளபதி விஜய் ரசிகரின் மரணத்திற்காக அஜித் ரசிகர்களும் கண் கலங்கி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Ajith Fans Condolences to Bala : தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

அஜித்தும் விஜய்யும் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும் அவரது ரசிகர்கள் எப்போதும் எலியும் பூனையுமாக தான் இருக்கின்றனர்.

இவர்கள் ஒன்றிணைவது என்பது அத்தி பூத்தாற்போல் நடக்கும் நிகழ்வுகள் தான்.

உன் மேல கோவமா வருது ஆனா? விஜய் ரசிகர் பாலாவின் தற்கொலை குறித்து மாஸ்டர் பட பிரபலங்களின் உருக்கமான பதிவு.!!

தற்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜய் ரசிகர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய மறைவுச் செய்தி கேட்டு அஜித் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் ரசிகரான பாலாவின் ஆன்மா சாந்தியடைய அஜித் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து இறைவனை பிராத்தித்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்களின் இந்தச் செயல் விஜய் ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனால் பல விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/AjithTrends_/status/1294091537878413313?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.