Master Celebrities About Bala Death

விஜய் ரசிகர் பாலாவின் தற்கொலை குறித்து மாஸ்டர் பட பிரபலங்கள் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

Master Celebrities About Bala Death : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாலா என்ற விஜய் ரசிகர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் செடி நட்டது இருக்கட்டும்.. அந்த போட்டோவில் இத கவனிச்சீங்களா?? – அம்பலமாகும் உண்மைகள்

இவரது மறைவு விஜய் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தளபதி விஜய் தொலைபேசி வாயிலாக பாலாவின் குடும்பத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்தநிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மகேந்திரன் மற்றும் சாந்தனு ஆகியோர் பாலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் மகேந்திரன் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது #RIPBala இந்தமாதிரி தவறான முடிவு எடுத்ததற்கு உன் மேல கோபம் வருது அதேபோல் கஷ்டமா இருக்கு வாழ்க்கையில எல்லாரும் போராடனும் suicide மட்டும் தீர்வல்ல 🙏 யாருமே இந்தமாதிரி தவறான முடிவு எடுக்காதீர்கள் 🙏 என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சாந்தனு பாலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல் எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.