Ajith Fans Angry on Boney Kapoor

தயாரிப்பாளர் போனி கபூர் அடுத்ததாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith Fans Angry on Boney Kapoor : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் போனி கபூர்.

பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான இவர் இப்படத்தை தொடர்ந்து வலிமை என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திலும் அஜித் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் உள்ள ஒரு படத்தையும் தயாரிக்க உள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து இவர் அடுத்ததாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற Prathi Poovankozhi என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்து வரும் வலிமை படம் பற்றி எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார் போனி கபூர். இதனால் எக்கச்சக்க கோபத்தில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

இந்தப் படம் பற்றி எந்த வித அப்டேட்டும் வெளியிடாமல் அடுத்தடுத்து தமிழ் படங்களை போனி கபூர் கையில் எடுப்பதால் தல அஜித் ரசிகர்கள் முதலில் வலிமை பட அப்டேட்டை வெளிவிடுங்கள் என அவரை கண்டபடி திட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.