Ajith Comment : தல அஜித் நான் நடிக்க தான் வந்திருக்கேன். சண்டை போட வரவில்லை என சிறுத்தை சிவாவிடம் கூறியதாக அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் இந்த பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளன.
முதலில் வெளியான ரஜினியின் பேட்ட படத்தின் ட்ரைலரில் விஸ்வாசம் படத்தை கலாய்ப்பது போல காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
அதன் பின்னர் வெளியான விஸ்வாசம் பட ட்ரைலரில் பேட்ட படத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் வசனங்கள் அமைய பெற்றிருந்தன.
அஜித், விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த கேப்டன் – புகைப்படங்களை பாருங்க.!
இதனால் இருவரும் வேண்டுமென்றே தான் மாறி மாறி தாக்கி கொண்டார்கள் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் பரவத் தொடங்கியது.
இந்நிலையில் சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித் அடிக்கடி என்னிடம் ஒன்று கூறுவார். நான் தமிழ் சினிமாவிற்கு நடிக்க தான் வந்திருக்கேன். யாருடனும் சண்டை போட அல்ல என கூறுவார் என கூறியுள்ளார்.
இது குறித்த தற்போது தல ரசிகர்களும் நெட்டிசன்களும் அஜித் எப்போதும் ரஜினியின் மீது தனி மரியாதை வைத்திருப்பவர்.
அதனால் வேண்டுமென்றே விஸ்வாசம் ட்ரைலரில் அப்படியான காட்சிகளை வைத்திருக்க வாய்ப்புகள் இல்லை. ரூபன் கூறியது போல இவை எதர்ச்சையாக அமைந்தவையாக தான் இருக்கும் என கூறி வருகின்றனர்.
விஸ்வாசம் படம் எப்படி இருக்கும்? – பிரபல திரையரங்கம் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!