Vijayakanth

Captain Vijayakanth : அஜித், விஜய் ரசிகர்களை ஒரே ஒரு டீவீட்டின் மூலம் ஒன்று சேர்த்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்.

சமீபத்தில் தியேட்டரில் படம் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் நலமுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார்.

இதனையடுத்து தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது என ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதெல்லாம் பரவாயில்லை.

இதில் ஆச்சர்யப்பட வைக்கும் விசியம் என்றால் சமூக வளையதளங்களில் எலியும் பூனையுமாக இருந்து வரும் அஜித், விஜய் ரசிகர்கள் கூட விஜயகாந்த் உடல்நிலை ஆரோக்யத்துடன் நாடு திரும்ப வேண்டும்.

அரசியலில் அவரின் கர்ஜனை மீண்டும் ஒலிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இவர்கள் மட்டுமில்லாமல் பெரும்பாலா நடிகர்களின் ஆசையும் இதுவாக தான் வெளிப்படுகிறது. இது தான் கேப்டனின் சிறப்பு.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.