Viswasam Movie

Viswasam Opinion : விஸ்வாசம் படம் எப்படி இருக்கும் என பிரபல திரையரங்கம் ட்வீட் ஒன்றை பதிவிட்டு பரபரப்பாக்கியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இம்மான் இசையமைத்துள்ளார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

அந்த டீவீட்டில் விஸ்வாசம் படத்தை பற்றிய சிவா அஜித் காம்போவில் விஸ்வாசம் தான் பெஸ்ட் எனவும் எமோஷன், நகைச்சுவை என அனைத்தும் கலந்த மாஸான படம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.