தல 61 படத்திற்காக அஜித் கொடுத்துள்ள கால்சீட் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

Ajith CallSheet to Thala61 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதே கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாக உள்ள தல 61 படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக தல அஜீத் 65 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

தல 61 படத்திற்காக அஜித் எத்தனை நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் தெரியுமா? முதல் முறையாக வெளியான தகவல்

தல அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்திருந்த நிலையில் மே ஒன்றாம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாது என படக்குழு அறிவித்தது.

இதனால் சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த தல 61 படம் பற்றிய தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது