Aishwarya Rajesh Tweet

Aishwarya Rajesh Tweet : ஒரே வார்த்தையில் தல மற்றும் தலைவர் ரசிகர்களை தாறுமாறாக கொண்டாட வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவில் மீடியம் பட்ஜெட்டில் உருவாகும் பெரும்பாலான படங்களில் நாயகியாக நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீபத்தில் சிவகார்திகேயன் தயாரிப்பில் வெளியாகி இருந்த கனா படத்தில் தன்னுடைய ஒட்டு மொத்த திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒத்த வார்த்தையில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த தல அஜித் மற்றும் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

காரணம் அவரது டிவீட்டல் குறிப்பிடப்பட்டிருந்த அந்த ஒரு வார்த்தை ஜனவரி 10 என்பது தான். அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட ஆகிய படங்கள் இதே நாளில் வெளியாவது தான்.

மேலும் இதே ஜனவரி 10 தான் ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here