ஐஸ்வர்யா ராஜேஷின் வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர் தற்போது முதன்மை கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதன் பிறகு தற்போது கடைசியாக ஜெயுடன் இணைந்து தீரா காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு ஜாலியாக டூர் சென்றுள்ளார்.

அங்கிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இணையத்தில் பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது டால்ஃபினுடன் விளையாடும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் முதலில் டால்ஃபினில் செயலால் மிரண்டு போன ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு அத்துடன் ஜாலியாக விளையாடி உள்ளார். அந்த வீடியோவிற்கு தற்போது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதோடு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.