AIADMK Manifesto
AIADMK Manifesto

AIADMK Manifesto – சென்னை: பரபரப்பான இன்றைய தேர்தல் களத்தில், அதிமுக தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிட உள்ளது. காலை 10.30 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் அறிக்கை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், லோக்சபா தேர்தலுக்காக வேகமாக தயாராகி வருகிறது. லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக நேற்று முதல்நாள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.

இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் மட்டும் மொத்தம் 7 பேர் இடம்பிடித்து இருக்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு. சி. பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமார், சி.வி சண்முகம், செ. செம்மலை, ரவி பெர்னார்ட், பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

மேலும் மக்களிடம் கருத்து கேட்டும், அதிமுக தொண்டர்களிடம் கருத்து கேட்டும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

எனவே இன்று காலை அதிமுக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்றே திமுக அறிக்கையும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.எனவே திமுக அறிக்கை வெளியான சில நிமிடங்கள் கழித்து, அதிமுக அறிக்கை வெளியிடப்படும்.

இந்த அறிக்கையில் ஆளும் அதிமுக அரசு மீது இருக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திட்டங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.