Bigil Overseas Review
பிகில் படத்தில் இருந்து குண்டம்மா காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என விஜய்க்கு எதிராக பலர் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் ரோபோ ஷங்கரின் மகளை குண்டம்மா என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பலரும் இந்த காட்சிக்கு எதிர்பார்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் படம் எடுத்து அதில் நீங்களே பெண்ணை அசிங்கப்படுத்தலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அட்லீ நெட்டிசன்கள் தன்னுடைய கலரை வைத்து கிண்டலடித்ததை பற்றி பேசி வருத்தப்பட்டார். ஒரு ஆணுக்கே உருவ கேலி வருத்தம் அளிக்கிறது என்றால் பெண்களுக்கு வலிக்காதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

தற்போது சமூக ஆர்வலரும் பெண்ணியவாதியுமான காயத்திரி என்பவர் இந்த காட்சி குறித்து குற்றம் சாட்டியுள்ளார். உருவக்கேலி #பிகில் காட்சிகள் நீக்கப்பட வேண்டும்! ஷாரூக் ஜக்தே இந்தியாவில் பல நுணுக்கங்களை கற்று தந்து வீராங்கனைகளை இந்தியாவிற்கு விளையாட வைக்கும் காட்சிகள் முகம் சுளிக்காத வண்ணம் அருமையாக இருக்கும். #குண்டம்மா என சொல்லும் போது இவ்வார்த்தையை கடந்து வந்த பெண்களுக்கு வலியே! என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.