இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அதிதி சங்கர் வெளியிட்டு இருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரல்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக திகழ்பவர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகளான இவர் கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே யுவன் சங்கர் ராஜா இசையில் ‘மதுரவீரன்’ என்னும் சூப்பர் ஹிட் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்திருந்த இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. பரத் ஷங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் யுகபாரதி எழுதிய ‘வண்ணாரப்பேட்டையில’ என்ற பாடலை அதிதி சங்கர், சிவகார்த்தியேனுடன் இணைந்து பாடி இருக்கிறார். இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.