நடிகை அதிதி சங்கரின் ரீசன்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Aditi Shankar latest photoshoots viral:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகளான இவர் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அனைவருக்கும் பரீட்சையமானார். முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகை அதிதி சங்கர் அடுத்ததாக இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் நடிகை அதிதி சங்கர் பதிவிட்டு இருக்கும் லேட்டஸ்ட்டான போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.