உடல் எடை குறைந்து அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் நடிகை அதிதி சங்கர்.
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார் அதிதி சங்கர்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான இவர் தொடர்ந்து தற்போது அடுத்த அடுத்த படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இவர் ஏற்கனவே இருந்ததை விட தற்போது மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் அதிதி அடையாளம் தெரியாமல் மாறிவிட்டதாக கருத்து கூறி வருகின்றனர்.