Adipurush Movie Review
Adipurush Movie Review

ஆதிபுருஷ் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். ‌‌‌இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இந்த படத்தில் கீர்த்தி சனோன் நாயகியாக சீதை கதாபாத்திரத்தில் நடிக்க சைப் அலிகான் இராவணனாக நடித்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

வனவாசம் காலத்தில் இராவணன் சீதையை கவர்ந்து சென்று விட பிறகு ராமன் சீதையை எப்படி மீட்டெடுக்கிறார் என்பது தான் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல்:

பால காண்டத்தை சுருக்கமாக சொல்லி ஆரண்ய காண்டத்தில் இருந்து கதையை தொடங்கி உள்ளார் இயக்குனர் ஓம் ரவுத்.

பிரபாஸ் ராமனாக நல்ல நடிப்பை கொடுத்தாலும் சில இடங்களில் பாகுபலி சாயல் வந்து செல்கிறது.

கீர்த்தி சனோன் சீதையாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சைப் அலிகான் இராவணனாக நடித்திருந்தாலும் அவருடைய நடை, பாவனை ராவணன் கதாபாத்திரத்திற்கு பெரியதாக ஒன்றி போகவில்லை.

இயக்குனர் ஓம் ரவுத் கதையை வித்தியாசமான கண்ணோட்டத்தில் கொண்டு சென்றுள்ளார். ஆனால் நிறைய இடங்களில் விஎப்எக்ஸ் காட்சிகள் சலிப்பை கொடுக்கின்றன.

குறிப்பாக வானரக கூட்ட காட்சிகள் ஏற்கும் படியாக இல்லை. ஆனாலும் ராமாயண கதைக்களத்தை புரியும் வகையில் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் ஆதிபுருஷ் ராமாயண கதையை விரும்புவர்களுக்கு நல்ல விருந்து.

YouTube video