ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த அனுபவம் கிடைத்தது: ‘குட் பேக் அக்லீ’ ஆதிக் அப்டேட்
‘தல’ அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சில அப்டேட்கள் தெறிக்க விட்டுள்ளார். வாங்க.. பார்ப்போம்..
‘குட் பேக் அக்லீ’ படத்தில் அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ளார் திரிஷா. மேலும் பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பில் ரசிகர்களை வைத்திருக்கும் வகையில், நாள்தோறும் ‘குட் பேட் அக்லீ’ தொடர்பாக அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. இவ்வகையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில்,
‘தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் அஜித் தான். அவருடன் நான் பணியாற்றியது எனது வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம். அவருடைய படங்களுக்கு நான் பேனர் வைத்திருக்கிறேன், போஸ்டர் அடித்திருக்கிறேன்.
மிகவும் எளிமையானவர், யாரைப் பற்றியும் எந்த குறையும் சொல்லமாட்டார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைப் பார்த்து கற்றுக்கொண்டு தான் நான் ‘மார்க் ஆண்டனி’ படம் இயக்கினேன். ‘மார்க் ஆண்டனி’ படம் உருவாகவும் அவர் ஒரு முக்கிய காரணம்.
‘குட் பேட் அக்லீ’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படியாகவே நாங்கள் படமாக்கி இருக்கிறோம். அவரது கெட்அப்கள் அனைவரையும் கவரும். வசனமும் அதற்கேற்ப வைக்கப்பட்டுள்ளது. குடும்ப சென்டிமென்ட்ஸும் உண்டு. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம். எமோஷனல் காட்சிகளும் படத்தில் இருக்கிறது.
இந்தப் படத்தை இயக்கும்போது, எனக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த அனுபவம்தான் கிடைத்தது. அப்படித்தான் எனக்கு அஜித்தை ஒவ்வொரு முறை பார்த்த அந்த 100 நாட்களும் கிடைத்தது’ என்றார் ஆனந்தமாய் ஆதிக்.
அப்ப, குட் பேக் அக்லீ இரண்டாம் பாகம் வருமோ.. ஆதிக் சார்.? பார்க்கலாம் பட ரிலீஸ் அன்று.!