
நடிப்பு மட்டுமல்லாமல் சொந்த பிசினஸிலும் கலக்கி வரும் ஐந்து சின்னத்திரை பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் நடிகைகளாக பலர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் சிலர் நடிப்பு மட்டுமல்லாமல் சொந்த தொழிலிலும் கவனம் செலுத்தி வருமானத்தை பல மடங்காக ஈட்டி வருகின்றனர்.
அப்படி சொந்த தொழில் மூலம் அதிக வருமானம் ஈட்டி வரும் 5 சின்னத்திரை பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
- வனிதா விஜயகுமார் :
சென்னையில் இவர் தனக்கென சொந்தமாக ஒரு பேஷன் போட்டி நடத்தி வருகிறார். அதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்டி வருகிறார்.

- மகேஸ்வரி :
விஜே-வாக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி துறையில் கவனம் செலுத்தி வரும் இவர் உணவகம், பேஷன் பொட்டிக் நடத்தி வருகிறார்.
- ஸ்ரீதேவி அசோக் குமார் :
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் இவர் தனக்கென சொந்தமாக ஒரு ஸ்பேஷன் ஜுவல்லரி ஷாப் வைத்துள்ளார்.
- சைத்ரா ரெட்டி :
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து பியூட்டி பார்லர் பிசினஸை கவனித்து வருகிறார். சென்னையில் இவர்களுக்கு சொந்தமாக பல பியூட்டி பார்லர் கிளைகள் உள்ளன.
- ஸ்ருதிகா :
ஒரு சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்து பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற இவர் தனக்கென சொந்தமாக இரண்டு காஸ்மெட்டிக் பிராண்டுகளை வைத்துள்ளார்.
