வினுஷா தேவியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வினுஷா தேவி. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது விஜய் டிவியில் பனி விழும் மலர்வனம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த சீரியலில் ஹீரோவாக சித்தார்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வினுஷா தேவி மஞ்சள் நிற புடவையில் கழுத்தில் தாலியுடன், மங்களகரமாக விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.